கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு இன்று முதல் அமல்

0 4303

கர்நாடகாவில் அறிவிக்கப்பட்டுள்ள 14 நாட்கள் பொதுமுடக்கம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து அம்மாநில தலைமைச் செயலாளர் ரவிக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா தொடர்புச் சங்கிலியை உடைக்க இன்று இரவு முதல் மே 12ம் தேதி காலை வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத செயல்பாடுகள் மற்றும் பிற கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments