ஐ.பி.எல். போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

0 2384

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 31 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில் ராகுல் திரிபாதி 41 ரன்களும், கேப்டன் இயான் மோர்கன் 47 ரன்களும் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 16 புள்ளி 4 ஓவர்களில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments