தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

0 2119
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பீகார் முதல் தென்தமிழக கடலோரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மாவட்டங்கள், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாளை முதல் 30 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments