தமிழகத்தில் சனிக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகளை மூட உத்தரவு... மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை

0 5453

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளை மூட அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றாமல் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

எனவே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மீன் சந்தைகள், கடைகள், இறைச்சி கடைகளை சனிக்கிழமைகளில் திறக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments