தமிழ்நாட்டில் இன்றும் 15 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று

0 3450

தமிழ்நாட்டில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 2வது நாளாக 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 15,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 13,625 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், சென்னையை சேர்ந்த 35 பேர் உள்பட 94 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகா, ஆந்திராவில் வந்த 18 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில், மேலும் 4250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1142பேருக்கும், கோயம்புத்தூரில் 1056 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 838 பேருக்கும், மதுரையில் 524 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 432 பேருக்கும்,திருநெல்வேலியில் 436 பேருக்கும், தூத்துக்குடியில் 503 பேருக்கும், திருச்சியில் 398 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 519 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 1,07,145 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments