கொரோனா தொற்று பரவலை தடுக்க வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கும் போதும், முகக் கவசம் அணிய வேண்டியது முக்கியம்

0 4747

கொரோனா தொற்று பரவலை தடுக்க, வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கும் போதும், முகக் கவசம் அணிய வேண்டியது முக்கியம் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். வெளி நபர்கள் யாரையும்  வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் வி.கே.பால் வலியுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments