வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் ஏஜென்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் - தேர்தல் ஆணையம்

0 1350

வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருக்க வேண்டும் எனத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

முகவர்கள் ஆர்டிபிசிஆர் சோதனை செய்து வாக்கு எண்ணிக்கைக்கு முன் 72 மணி நேரத்திற்குள் கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 14 மேசைகளிலும் ஒவ்வொரு மேசைக்கும் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும், அஞ்சல் வாக்குகளை 500, 500 ஆகப் பிரித்து வைத்த பின்னர் வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

குலுக்கல் முறையில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை எடுத்து அதை வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 23 வரை வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 லட்சம் அஞ்சல் வாக்குகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments