அடுத்த 10 நாட்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4.4 இலட்சத்தை எட்டும் - ஐஐடி வல்லுநர்கள் கணிப்பு

0 2764

மே மாத நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 38 முதல் 48 லட்சத்தை எட்டி உச்சநிலையைத் தொடும் என ஐஐடி அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் ஒருநாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி நோயாளிகளின் எண்ணிக்கை 28 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில் கொரோனா நிலவரம் குறித்து ஐஐடி அறிவியலாளர்கள் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் அடுத்த 10 நாட்களில் ஒரு நாளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்தை எட்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. மே 14 - 18 இடையே நோயாளிகள் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டு 38 முதல் 48 லட்சம் வரை இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments