நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை குறைவு

0 1453

நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 1 ரூபாய் குறைந்துள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவானது கடந்த 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 4 ரூபாய் 85 காசுகளாக நிர்ணயித்த நிலையில், இன்று முட்டை ஒன்றின் கொள்முதல் விலையானது 3 ரூபாய் 85 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமலில் இருக்கும் இரவு நேர ஊரடங்கு காரணமாக உணவகங்களில் முட்டை தேவை குறைந்ததாலும், பல்வேறு கட்டுபாடுகள் காரணமாக வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்படுவதாலும் முட்டை விலை குறைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments