3 ஆஸ்கர் விருதுகளை வென்றது நோமட் லேண்ட் : சிறந்த நடிகர் அந்தோணி ஹாப்கின்ஸ்

0 3240

2020ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை நோமட் லேண்ட் திரைப்படம் வென்றுள்ளது. இந்த படத்தை இயக்கிய குளோயி சாவோ, சிறந்த இயக்குநருக்கான விருதை வென்று, ஆஸ்கர் விருது பெறும் முதல் ஆசியப் பெண் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.  

உலகின் திரைப்பட விருதுகளில் உச்சமாகக் கருதப்படும், 93ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. கொரோனா பேரிடர் காரணமாக கோலாகல கொண்டாட்டங்கள் இன்றியும், குறைவான எண்ணிக்கையிலான விருந்தினர்களுடன், அரங்கப் பார்வையாளர்கள் இன்றி விழா நடைபெற்றது.

சிறந்த நடிகருக்கான விருதை, The Father படத்தில் நடித்த, புகழ்பெற்ற மூத்த நடிகர் அந்தோணி ஹாப்கின்ஸ் வென்றார். விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கவில்லை.

சிறந்த நடிகைக்கான விருதை, நோமட் லேண்ட் திரைப்படத்தில் நடித்த ஃபிரான்சஸ் மெக்டார்மன்ட் தட்டிச் சென்றார். நடிப்புலகின் சூப்பர்ஸ்டார் என வர்ணிக்கப்படும் அவர், மூன்றாவது முறையாக சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.

சிறந்த திரைப்படமாக நோமட் லேண்ட் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. அந்த திரைப்படத்தை இயக்கிய, சீனாவைச் சேர்ந்த பெண் இயக்குநர் குளோயி சாவோ, சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார். ஆஸ்கர் விருது பெறும் இரண்டாவது பெண் இயக்குநரான குளோயி சாவோ, அந்த விருதைப் பெறும் முதல ஆசியப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சோல் Soul என்ற அனிமேஷன் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. Trent Reznor, Atticus Ross, Jon Batiste ஆகிய மூவரும் இவ்விருதைப் பெற்றுக் கொண்டனர். இதில் Jon Batiste ஆஸ்கர் விருது பெறும், கருப்பினத்தை சேர்ந்த இரண்டாவது இசையமைப்பாளர்.

சிறந்த திரைக்கதைக்கான விருதை, Promising Young Woman! படத்திற்காக  Emerald Fennel வென்றார்.  

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை The Father படத்திற்காக  Christopher Hampton மற்றும் Florian Zeller பெற்றுக் கொண்டனர்.

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படமாக, டென்மார்க்கை சேர்ந்த Another Round தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த துணை நடிகருக்கான விருதை Judas and the Black Messiah படத்தில் நடித்த Daniel Kaluuya தட்டிச் சென்றார்.

சிறந்த துணை நடிகைக்கான விருதை மினாரி திரைப்படத்தில் நடித்த Yuh-jung Youn பெற்றுக் கொண்டார்.

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான விருதை Ma Rainey’s Black Bottom படம் வென்றது. இந்த திரைப்படத்தின் ஒப்பனைக் கலைஞர்களான Mia Neal, Jamika Wilson ஆகிய இருவரும், இந்தப் பிரிவில் விருதுபெறும் முதல் கருப்பினப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Ma Rainey’s Black Bottom திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை வென்றது. Ann Roth விருதைப் பெற்றுக் கொண்டார்.

சிறந்த படத்தொகுப்புக்கான விருதை Sound of Metal படத்திற்காக,Mikkel E.G. Nielsen பெற்றுக் கொண்டார்.

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை Mank படத்திற்காக Erik Messerschmidt பெற்றுக் கொண்டார்.

சிறந்த விசுவல் எஃபெக்ட்சுக்கான விருதை கிறிஸ்டோபர் நோலனின் Tenet வென்றது. Andrew Jackson, David Lee, Andrew Lockley, Scott Fisher ஆகிய நால்வரும் விருதைப் பெற்றுக் கொண்டன

சிறந்த ஆவணப்படமாக My Octopus Teacher தேர்வு செய்யப்பட்டது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் நினைவுகூரும் பிரிவில் மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் கௌரவம் அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments