மேற்கு வங்கத்தில் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு : வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிப்பு.!

0 1288

மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏழாம் கட்டமாக இன்று 34 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒன்பதரை மணி நிலவரப்படி 18 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன.

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கச் சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று ஏழாம் கட்டமாக 5 மாவட்டங்களில் உள்ள 34 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஏழாம் கட்டத்தில் தேர்தல் நடைபெற இருந்த ஜங்கிப்பூர், சம்சேர்கஞ்ச் தொகுதிகளில் வேட்பாளர்கள் இறந்ததால் அங்குத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 34 தொகுதிகளின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்தியப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிசேக் பானர்ஜி கொல்கத்தா பவானிப்பூரில் வாக்களித்தார். அப்போது பேசிய அவர், திரிணாமூல் காங்கிரஸ் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜகான் பெற்றோருடன் வந்து கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments