ராட்சத கரண்டி கொண்டு டீ மாஸ்டரை அடித்து கொன்ற சமையல்காரர் : தொழில்போட்டியால் வந்த விபரீதம்

0 10148

சென்னை அடுத்த அம்பத்தூரில் தொழில் போட்டி காரணமாக சக தொழிலாளியை கரண்டியால் அடித்துக் கொன்ற வட மாநில சமையல் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

மகாத்மா காந்தி சாலையில் உள்ள உணவு விடுதியில் பணி புரியும் டீ மாஸ்டருக்ககும், வட மாநில சமையல் மாஸ்டர் வினோத்திற்கும் தொழில் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மது அருந்திக் கொண்டு இருந்த வினோத்திடம், டீ மாஸ்டர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வினோத் ராட்சத கரண்டி கொண்டு டீ மாஸ்டரை அடித்து கொலை செய்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments