பள்ளி மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம்.... தவறுதலாக மைதானத்திற்குள் நுழைந்த நாய்... வெற்றி பெற்றதாக அறிவிப்பு..!

0 11935
பள்ளி மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம்.... தவறுதலாக மைதானத்திற்குள் நுழைந்த நாய்... வெற்றி பெற்றதாக அறிவிப்பு..!

மெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயத்தில் குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

உட்டா மாகாணத்தில் உள்ள லோகன் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் ஓட்டப்பந்தயப் போட்டிகள் நடந்தன.

அப்போது பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிய போது பார்வையாளர் பகுதியிலிருந்து நாய் ஒன்று குறுக்கே வந்தது.

பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு நடுவே அந்த நாயும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. இதனைக் கண்ட பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

எல்லைக் கோட்டுக்கு அருகே வந்த போது மாணவியை விட ஒரு வினாடி முந்திச் சென்று அந்த நாய் வெற்றி பெற்றதாக விளையாட்டாக அறிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments