கொரோனாவின் 2வது அலை நாட்டையே உலுக்கி விட்டது - பிரதமர் மோடி

0 1339
கொரோனாவின் 2வது அலை நாட்டையே உலுக்கி விட்டது - பிரதமர் மோடி

கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டையே உலுக்கி விட்டதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டில் வீசி வரும் கொரோனா அலை நமது பொறுமையையும், எந்த அளவுக்கு நம்மால் வேதனையை தாங்க முடியும் என்பதையும் சோதிப்பதாகக் கூறினார்.

கொரோனாவின் முதல் அலையை நாம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தினாலும், இப்போது வீசும் இரண்டாம் அலை நாட்டையே உலுக்கி விட்டது என்றார் மோடி.

தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு இரையாக வேண்டாம் என மக்களை கேட்டுக் கொண்ட மோடி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசியை இலவசமாக அனுப்புவதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments