இந்தியாவுக்கு ஆக்சிஜன் ,வெண்டிலேட்டர்கள், ரெம்டிசிவிர் மருந்துகள் குப்பிகள் அனைத்து வகை உதவிகளையும் வழங்குவதாக ரஷ்யா அறிவிப்பு

0 3067
இந்தியாவுக்கு ஆக்சிஜன் ,வெண்டிலேட்டர்கள், ரெம்டிசிவிர் மருந்துகள் குப்பிகள் அனைத்து வகை உதவிகளையும் வழங்குவதாக ரஷ்யா அறிவிப்பு

ந்தியாவுக்கு கடும் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ள சூழலில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், செறிவூட்டும் சாதனங்கள், ரெம்டிசிவிர் மருந்து குப்பிகள் உள்பட அனைத்து வகை உதவிகளையும் வழங்குவதாகவும் அவை விரைவில் இந்தியாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.

ஆனால் ரெம்டிசிவிர் மருந்து அமெரிக்காவில் காப்புரிமை பதிவு செய்யப்பட்டிருப்பதால் இந்தியாவுக்கு அதனை ரஷ்யா அனுப்ப முடியாத சட்டச் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

4 லட்சம் ரெம்டிசிவிர் ஊசிகளை இந்தியாவுக்கு அனுப்பத் தயார் என்று முன்பு ரஷ்யா அறிவித்திருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments