கொரோனா பரவலைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

0 3269
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தீவிரமாக கண்காணிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தீவிரமாக கண்காணிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போதுள்ள மருத்துவ வசதிகள், மருந்துகள் கிடைக்காத நிலை, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற பிரச்சினையால் பல்வேறு நகரங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் சூழ்நிலையில் உள்கட்டுமானம் போதுமான அளவுக்கு இல்லாமல் போகலாம் என்பதை மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது.

எனவே கொரோனா பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவாமல் இருக்க அதன் தொடர்பை 14 நாட்கள் இடைவெளியில் துண்டிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

எனவே உள்ளூரில் கொரோனா பாதித்தவர்கள் பிறருடன் கலக்காமல் இருக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments