கொரோனா பரவல் காரணமாக சென்னையில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து

0 7959
சென்னையில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், சென்னையிலிருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதே நேரத்தில் இந்தியாவில் வசிக்கும் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்ல  சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்றும், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்கள் மற்றும் அரசு முறையிலான பயணம் செய்யும் இந்தியர்களுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளிலிருந்தும் சென்னை உட்பட  இந்தியாவிற்கு சரக்குவிமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments