இந்தியாவில் புதிய உச்சமாக 3.5 லட்சத்தை நெருங்குகிறது ஒருநாள் கொரோன பாதிப்பு

0 2528
இந்தியாவில் புதிய உச்சமாக 3.5 லட்சத்தை நெருங்குகிறது ஒருநாள் கொரோன பாதிப்பு

நாட்டில் ஒரு நாள் கொரோனா தொற்று புதிய உச்சமாக மூன்றரை லட்சத்தை நெருங்கி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்திரல் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் 2 ஆயிரத்து 767 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகினர். 2 லட்சத்து 17 ஆயிரத்து 113 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், 26 லட்சத்து 82 ஆயிரத்து 751 பேர் தொற்று பாதித்து சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 69 லட்சத்தை கடந்துள்ளது. இது வரையிலான இறப்பு எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14 கோடியே ஒன்பது லட்சத்து 16 ஆயிரத்து 417 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments