தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

0 2589
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

இன்று முழு ஊரடங்கு என்பதால் மது அருந்துபவர்கள் தங்களுக்குத் தேவையான மதுபானங்களை நேற்றே வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். எனவே, நேற்று ஒரே நாளில் 252 கோடியே 48 லட்ச ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளதாகவும், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 58 கோடியே 37 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக மதுரை மண்டலத்தில் 49 கோடியே 43 லட்ச ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 48 கோடியே 57 லட்ச ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 48 கோடியே 32 லட்ச ரூபாய்க்கும் , சேலம் மண்டலத்தில் 47 கோடியே 79 லட்ச ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments