டெல்லியில் முழுஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு - முதலமைச்சர் கெஜ்ரிவால்

0 1627
டெல்லியில் முழுஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு - முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லியில் மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஏற்கெனவே ஏப்ரல் 19 முதல் 25 வரை 6 நாள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு நாளைக் காலை 5 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில், சனியன்று ஒரே நாளில் புதிதாக 24 ஆயிரத்து 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் நாளைக் காலை 5 மணிக்கு முடிய இருந்த ஊரடங்கை மே மூன்றாம் நாள் காலை வரை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் பெரிய வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கலையரங்குகள் ஏப்ரல் 30 வரை மூடப்பட்டிருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments