சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 3434
சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை மாநகராட்சியில் தேனாம்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் 31 ஆயிரத்து 506 பேர் தற்போதைய கொரோனா நோயாளிகளாக உள்ளனர். அதிக அளவாகத் தேனாம்பேட்டை மண்டலத்தில் மூவாயிரத்து 318 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் மூவாயிரத்து 295 பேரும் தற்போதைய கொரோனா நோயாளிகளாக உள்ளனர்.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 6 மண்டலங்களிலும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா நோயாளிகளாக உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments