99 நாட்களில் 14 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி ..! இந்தியா உலகிலேயே மிக விரைவாக தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திய நாடு என்ற பெருமை

0 573
99 நாட்களில் 14 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி ..! இந்தியா உலகிலேயே மிக விரைவாக தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திய நாடு என்ற பெருமை

99 நாட்களில் சுமார் 14 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு, உலகிலேயே மிக விரைவாக தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இது குறித்த புள்ளிவிவரங்களை  சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 16 ல் துவங்கிய முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில்,  சுகாதார பணியாளர்கள்  92.89 லட்சம் பேருக்கு முதல் டோசும், 59.94 லட்சம் பேருக்கு 2 ஆம் டோசும் போடப்பட்டுள்ளது.

முன்கள பணியாளர்களை பொறுத்தவரை 1.19 கோடி பேருக்கு முதல் டோசும், 62.77 லட்சம் பேருக்கு 2 ஆம் டோசும் போடப்பட்டுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி துவங்கிய 2 ஆம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் 45 முதல் 60 வயது பிரிவினரில் 4.76 கோடி பேர் முதல் டோசையும், 23.22 லட்சம் பேர் 2 ஆம் டோசையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 4.96 கோடி பேருக்கு முதல் டோசும், 77.02 லட்சம் பேருக்கு 2 ஆம் டோசும் போடப்பட்டுள்ளது. வரும் 1 ஆம் தேதி துவங்க உள்ள 3 ஆம் கட்ட தடுப்பூசி போடும் பணியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments