வீதிக்கு வந்த விஜயலட்சுமி.. பின்னணியில் நகைகடை ஹரி..?

0 371172

மூன்று மாதமாக தான் தங்கி இருந்த சர்வீஸ் அப்பார்ட் மெண்டுக்கு வாடகை கொடுக்காததால், நடிகை விஜயலட்சுமி தங்கிய அறையில் இருந்து வெளியேற்றப்பட்டு வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள Rich in service அப்பார்ட்மெண்டின் தரைத் தளத்தில் நடிகை விஜயலட்சுமி தங்கியிருந்தார்.தனது சகோதரியின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தங்கி இருந்துவிட்டு சகோதரியுடன் அபார்ட்மென்ட்க்கு திரும்பியுள்ளார் விஜயலட்சுமி.

அப்போது தனது அறைக்குள் ஆண் ஒருவர் குளித்துக் கொண்டிருப்பதை பார்த்து அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகளிடம் சத்தமிட்டுள்ளார், 3 மாதமாக வாடகை தராததால் அறையை வேறு நபருக்கு ஒதுக்கியதாகவும் பொருட்களை பக்கத்து அறையில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து ஆவேசமான விஜயலெட்சுமி தனது பொருட்களை எல்லாம் அறையில் இருந்து வெளியில் தூக்கி வைத்துவிட்டு செய்தியாளர்களை அழைத்து அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் மீது குற்றஞ்சாட்டினர்.

ஹரி நாடார் தனக்கு தெரிந்த பாதுகாப்பான இடம் என்று கூறி இந்த அபார்ட்மென்ட்டில் தன்னை தங்க வைத்ததாகவும் , தற்போது அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த சம்பவம் நடந்துள்ளதாக விஜயலெட்சுமி கூறினார்.

யாரோ சிலரின் தூண்டுதலால் தனது பொருட்களை வெளியில் தூக்கி போட்டுள்ளதாகவும், வாடகைப் பணம் பிரச்சனை என்றால் தன்னை அழைத்து வந்து தங்க வைத்த ஹரி நாடாரிடம் இவர்களே பேசி அதை பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் சீமானை வரைமுறையில்லாமல் விமர்சித்ததை மறந்து, சீமான் தனது பேட்டியை பார்த்து தனது நிலையை உணர்ந்து உதவ வேண்டும் என்றும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார் விஜயலட்சுமி.

கடந்த பிப்ரவரி 24 முதல் தங்கியிருந்த விஜயலட்சுமி இதுவரை வாடகைப் பணம் எதுவும் தரவில்லை என்றும் அவரது பொருட்களை வெளியில் தூக்கி போடாமல் , மாற்று அறையில் வைத்து விட்டு அவர் தங்கியிருந்த அறையை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தோம் என அப்பார்ட்மெண்ட் மானேஜர் விக்னேஸ்வரன் விளக்கம் அளித்தார்.

ஆனால் விஜயலெட்சுமி நாடகமாடுவதாக தெரிவித்த அவர், தங்கள் அறை உதவியாளரான சிவா என்பவரை விஜயலட்சுமி செருப்பால் தாக்கியதாக குற்றம் சாட்டினார். அத்தோடு ஹரி நாடாருக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமே இல்லை எனவும் ஜாவித் என்பவர் மூலமே விஜயலட்சுமி அபார்ட்மென்ட்க்குள் வந்தார் என்றும் விக்னேஷ்வரன் கூறினார். 

மேலும் மேனேஜர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளிக்க முயன்ற நிலையில் அங்கு விரைந்து வந்த விஜயலட்சுமி செய்தியாளர்களை நோக்கி அவரிடம் பேட்டி எடுக்க கூடாது என சீறியதுடன் , நான் பேசியதை மட்டும் போடுங்கள் என ஆவேசப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

பின்னர் தேனாம்பேட்டை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விஜயலட்சுமியை சமாதானப்படுத்தி மாற்று இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

காரம் அதிகமானா விக்கல் வரும் ,விஜயலெட்சுமிக்கு உதவ போனா சிக்கல் வரும் என்ற நிலைமையினால் அவரைக் கண்டு பலரும் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments