தமிழகத்தில் முழு ஊரடங்கு- வெறிச்சோடிய சாலைகள்..!

0 5689
தமிழகத்தில் முழு ஊரடங்கு- வெறிச்சோடிய சாலைகள்..!

கொரோனா பரவலைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை கோயம்பேடு சந்தை மற்றும் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

சேலத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

கோவையின் முக்கியப் பகுதியான காந்திபுரம், உக்கடம் பகுதிகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஊரடங்கு காரணமாக கோவை ரயில் நிலையத்தில் பிற்பகல் வரும் ரயிலுக்கு நேற்று இரவு முதலே வட மாநில தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

தூத்துக்குடியில் முழு ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.

இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு காரணமாக பரபரப்பாகக் காணப்படும் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை பகுதி, சிம்மக்கல் காமராஜர் சாலை உள்ளிட்ட நகரின் அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

திருச்சியில் முழு ஊரடங்கு காரணமாக மாநகர சாலைகள் வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன.

முழு அளவிலான பொது முடக்கம் காரணமாக கரூர் ஜவஹர் பஜார், கோவை ரோடு மற்றும் மேற்கு பிரதட்சனம் சாலை உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சென்னை அடையாறில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வரும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.

முழு ஊரடங்கு காரணமாக சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் முழு ஊரடங்கை மீறி வெளியே வருவோருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு காரணமாக சென்னை ராயப்பேட்டையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றி  வெளியே வருவோரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.

முழு ஊரடங்கை பயன்படுத்தி கடலூர் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இரண்டாவது நாளாக அமல்மடுத்தப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

முழு ஊரடங்கு காரணமாக உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அடையாறு சங்கீதா உணவகம் முன் 20 க்கும் மேற்பட்ட ஸ்விக்கி , சொமாட்டோ ஊழியர்கள் ஆர்டர்களுக்காக காத்திருக்கின்றனர்.

முழு ஊரடங்கையொட்டி சென்னை கோயம்பேட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், தேவையின்றி வாகனங்கள் வந்தால் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.

முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

முழு ஊரடங்கு காரணமாக தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

முழு ஊரடங்கையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி கிராமபுற சாலைகளிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முழு ஊரடங்கு எதிரொலியால் சென்னையின் பிரதான வர்த்தக பகுதியான தியாகராய நகர் பகுதியில் காய்கறி சந்தைகள், சிறு, குறு கடைகள், பெரு நிறுவன அங்காடிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கால் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த கறிக்கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் 

திருச்சியில் மொத்தம் 22 இடங்களில் ஒரு கூடுதல் துணை ஆணையர், 2 உதவி ஆணையர்கள், 8 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருமணம் செய்ய 12 திருமண ஜோடிகள் முன்பதிவு செய்திருந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக கோயில் நடை மூடப்பட்டதால் அவர்களின் உறவினர்கள் முற்றுக்கை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் தேவையின்றி வெளியில்  சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு ஊரடங்கு நாளிலும், சென்னையில் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து சேவை இல்லாததால் மக்கள் வருகை குறைவாகவே உள்ளது. 

முழு ஊரடங்கு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான, ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி, அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித்திரிபவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பிவருகின்றனர்.

முழு ஊரடங்கையொட்டி தஞ்சாவூரில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை ரயில் நிலையத்திற்கு ரயில் மூலம் வந்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் அங்கேயே குழந்தைகளுடன் காத்திருக்கின்றனர்.

முழு ஊரடங்கு காரணமாக சென்னை சைதாப்பேட்டையில் மீன் சந்தை உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

முழு ஊரடங்கு நாளிலும் சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கி வரும் நிலையில், அத்தியாவசிய பணிகளுக்காக செல்லக்கூடிய பயணிகள் சென்று வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக 3 திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு என தனியார் மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்டிருந்த 82 சதவீத படுக்கைகள் நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு உட்பட மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சாலையில் ஆங்காங்கே முகாமிட்டு வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீசார், தேவையின்றி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சொற்ப அளவிலான வாடிக்கையாளர்கள் மட்டும் உணவுப் பார்சல்களை வாங்கிச் சென்றனர்.

முழு ஊரடங்கு காரணமாக சென்னை பிராட்வே பகுதி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிக் காணப்படுகிறது. 

சுபமுகூர்த்த நாளையொட்டி சென்னை திருவான்மியூர் பகுதியில் திரளானோர் திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் நிலையில், போலீசார் திருமண அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments