நாளை அதிகாலை வரை பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளிள் நேற்று அலைமோதிய மக்கள் கூட்டம்..!

0 5398
நாளை அதிகாலை வரை பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளிள் நேற்று அலைமோதிய மக்கள் கூட்டம்..!

ன்று ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்களை வாங்கவும் மீன், கறி வாங்கவும் மக்கள் நேற்றிரவு பெரும் திரளாகத் திரண்டனர்.டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலை மோதியது.

முழு ஊரடங்கை முன்னிட்டு கரூரில் நேற்றே சரக்கு வாங்கி வைக்க குடிமகன்கள் டாஸ்மாக் கடை வாசலில் பெரும் திரளாகத் திரண்டிருந்தனர். அவர்களை வரிசையில் நிறுத்தி ஒழுங்குப்படுத்த கடை ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர்

இதே போல் மீன் இறைச்சி கிடைக்காது என்பதால் நேற்றே சந்தையில் மீன்விற்பனையும் கறி விற்பனையும் அமோகமாக இருந்தது. ஏராளமானோர் திரண்டதால் கொரோனா முன்னெச்சரிக்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள இரண்டு அரசு மதுபான கடைகளில் மது வாங்குவதற்காக சமூக இடைவெளி இன்றி மது பிரியர்கள் குவிந்தனர். சமூக இடைவெளி இல்லாமல் மதுபானம் விற்ற 2 அரசு மதுபான கடைகளுக்கு மதுராந்தகம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையாக ஒரு கடைக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம்  அபராதம் விதித்தனர் 

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்யாவசியத் தேவைகளை விற்பனை செய்யும் அனைத்து வகை விற்பனை நிலையங்களிலும் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

குறிப்பாக மீன் விற்பனை நிலையங்கள், இறைச்சிக் கடைகளில் வழக்கத்தை விடவும் அதிக கூட்டம் இருந்தது.   

மதுபானப் பிரியர்கள் அனைவரும் மொத்தமாக மதுபானப் பாட்டில்களை வாங்கிச் சென்றனர். மாவட்டத்திலுள்ள 400க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளிலும் தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் விற்பனை செய்யப்படுவதைப் போலவே தடுப்புக்கள் அமைக்கப்பட்டு நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், முகூர்த்த நாள் என்பதால் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்ப பேருந்து இல்லாமல் பயணிகள் தவித்தனர். பலர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை காணப்பட்டது.

புதுக்கோட்டையில் ஊரடங்கு காரணமாக வணிகர்கள் இரவு 9 மணிக்கு முன்பாகவே கடைகளை அடைக்கத் தொடங்கி விட்டனர். இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது ஆனாலும் மதுக்கடைகளில் மட்டும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments