முழு ஊரடங்கு நேரத்தில் அவசியமின்றி வெளியில் சுற்றினால் வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - காவல்துறை எச்சரிக்கை

0 3667
முழு ஊரடங்கு நேரத்தில் அவசியமின்றி வெளியில் சுற்றினால் வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - காவல்துறை எச்சரிக்கை

முழு ஊரடங்கு காலத்தில் அநாவசியமாக வெளியில் சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

காய்கறி கொண்டு செல்லும் வாகனங்கள், உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு பார்சல் கொண்டு செல்லும் வாகனங்கள், திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு தொடர்பான வாகனங்கள் உள்ளிட்டவை அவர்களுக்கு என்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீறி வரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின், 044 - 23452330 என்ற எண்ணுக்கோ அல்லது 044 - 23452362 என்ற எண்ணுக்கோ அழைத்து விளக்கம் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments