மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவது குறித்த மத்திய அரசு புதிய வழிகாட்டல்கள்

0 10390
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவது குறித்த மத்திய அரசு புதிய வழிகாட்டல்கள்

மே முதல் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார்.

தடுப்பூசி திட்டத்தை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு செயல்படுத்தும்படி வலியுறுத்திய அவர், தவறான தகவல்கள் இத்திட்டத்தையே சீர்குலைத்து விடும் என்று எச்சரித்தார்.

தடுப்பூசிகளை நேரடியாகவே மாநில அரசுகள் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேவையான தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments