இரவு நேர ஊரடங்கைத் தொடர்ந்து இன்று முழு ஊரடங்கு அமல்..!

0 12505
இரவு நேர ஊரடங்கைத் தொடர்ந்து இன்று முழு ஊரடங்கு அமல்..!

இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து சென்னையில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

நேற்றிரவு 10 மணிக்குத் தொடங்கிய இரவுநேர ஊரடங்கும் அதனைத் தொடர்ந்து இன்று ஞாயிறு முழு ஊரடங்கும் அமலில் உள்ளன. நாளை அதிகாலை 4 மணி வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விலக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தியாவசியப்பணியாளர்கள், ஊடகத்துறையினர் மருத்துவ சிகிச்சைக்காக செல்வோர் தவிர மற்ற அனைவரும் வீடுகளில் இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

முழு ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து இன்று தடை செய்யப்பட்டு, பேருந்துகள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இன்று மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை பயன்பாட்டில் உள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி கடைகள் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய முழு ஊரடங்கு நாளை காலை தளர்த்தப்படும் என்ற போதும் நாளை முதல் ஊரடங்கின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments