காற்றில் ஒரு மணி இருக்க கூடிய கொரோனா வைரஸ்... இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்

0 5836

காற்றில் சுமார் ஒரு மணி நேரம் வரை இருக்க கூடியதும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொற்றும் திறன் வாய்ந்ததுமான புதிய கொரோனா வைரசின் வடிவம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிவேகத்தில்  பரவக்கூடிய இந்த வைரஸ் பற்றிய தகவலை கொழும்புவில் உள்ள ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழக நோய்எதிர்ப்பு மருத்துவ துறை தலைவர் நீலிகா மாளவிகா வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் இலங்கையில் நடந்த சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு இந்த மரபணு மாற்ற வைரஸ் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு இலங்கையில் கண்டறியப்படட் கொரோனா வைரஸ் வகையில் அதிகம் தொற்றும் திறந் இந்த வைரசுக்கு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments