கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி தேச விரோதிகள் தலையெடுக்கலாம் -ஆர்எஸ்எஸ்

0 2787

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை பயன்படுத்தி தேச விரோத சக்திகள் பிரிவினைவாத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என ஆர்எஸ்எஸ்  எச்சரித்துள்ளது.

கொரனாவின் இரண்டாவது அலை நாட்டுக்கு கடினமான சவாலை விடுத்துள்ளது என தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே , நிலைமை சிக்கலாக இருந்தாலும்,  சமூகத்தின் வலிமை அபரிதமானது என குறிப்பிட்டுள்ளார். மிகவும் சிக்கலான நெருக்கடிகளை சமாளிக்கும் இந்தியாவின் திறன் உலகிற்கே தெரியும் எனவும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத சக்திகளுக்கு இடம் அளிக்க கூடாது என மக்களை கேட்டுக் கொண்டுள்ள அவர், அனைத்துப் பிரிவினரும் இந்த நேரத்தில் சமூகத்தில் நம்பிக்கையையும், பரஸ்பர நல்லுறவையும் வளர்க்க முன்வருமாறு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments