மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: மத்திய அரசு

0 2092
மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: மத்திய அரசு

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக தரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு போலவே அடுத்த கட்ட தடுப்பூசி பணிகளுக்கும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments