தடுப்பூசி மூலப்பொருள் ஏற்றுமதி தடையை நீக்க இயலாது - இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு

0 5164
தடுப்பூசி மூலப்பொருள் ஏற்றுமதி தடையை நீக்க இயலாது - இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு

மெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற முன்னுரிமை உள்ளதால், தடுப்பூசி மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடையை இப்போது விலக்கிக் கொள்ள முடியாது என அதிபர் பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் பைடன் நிர்வாகம் விதித்த இந்த தடையால் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து தடையை நீக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், அமெரிக்க மக்களுக்கான தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நடைபெறும் நிலையில், தடுப்பூசி மூலப்பொருட்களுக்கான தடையை நீக்குவது சாத்தியமில்லை என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments