தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்கிற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு

0 2475
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்கிற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு

ருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சப்ளை தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரை ஏற்படுத்தியுள்ள தமிழக அரசு,  மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக 104 என்ற  எண்ணில் உதவிக்கு அழைக்கலாம் என அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. 

ஆக்ஸிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளை வந்தடைய தேவைப்படும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஏற்படும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments