மும்பை பாந்த்ராவில் உள்ள மிகப்பெரிய தடுப்பூசி மையத்தில் வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஏராளமான மக்கள்

0 2361
மும்பை பாந்த்ராவில் உள்ள மிகப்பெரிய தடுப்பூசி மையத்தில் வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஏராளமான மக்கள்

மும்பை பாந்த்ராவில் உள்ள மிகப்பெரிய தடுப்பூசி மையத்தில் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மும்பை மாநகராட்சி சார்பில் பாந்த்ரா - குர்லா வளாகத்தில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதையொட்டி மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி மையமும் செயல்பட்டு வருகிறது.

தடுப்பு மருந்து பற்றாக்குறையால் இந்த மையத்தில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் போதிய தடுப்பு மருந்துகள் கொண்டுவரப்பட்டதையடுத்து தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.

ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments