பொரிந்து தள்ளிய நந்தினியின் வாழ்க்கையில் இப்படியும் ஒரு சோகம்... வழக்கில் இருந்து விடுவிக்க சகோதரர் கண்ணீர் மல்க வேண்டுகோள்..!

0 132045
பொரிந்து தள்ளிய நந்தினியின் வாழ்க்கையில் இப்படியும் ஒரு சோகம்... வழக்கில் இருந்து விடுவிக்க சகோதரர் கண்ணீர் மல்க வேண்டுகோள்..!

ஞ்சையில் முக கவசம் அணியாமல் ஸ்கூட்டரில் வந்த பெண் அபராதம் கட்ட முடியாது என்று கூறி மாவட்ட ஆட்சியரையும். காவல்துறையினரையும் திட்டிய வழக்கில் இளம் பெண்ணை மன்னித்து விடுவிக்க வேண்டுமென்று அவரின் சகோதரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது முக கவசம் அணியாமல் ஸ்கூட்டரில் வந்த இளம்பெண் 200 ரூபாய் அபராதம் கட்ட மாட்டேன் என கூறி மாவட்ட ஆட்சியரையும். காவல்துறையினரையும் தரக்குறைவாக பேசினார்.

இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவியது. அந்த பெண் மீது தஞ்சை மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

தஞ்சை மனோஜிபட்டி மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் பன்னீர்செல்வம் என்பவரது மகள் சியாக்கி என்கிற நந்தினி என்பது தெரியவந்தது. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு இவர், சென்னையில் சில காலம் வேலை பார்த்துள்ளார்.

தற்போது,தஞ்சையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தினரையும் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்கு அழைத்து வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர் அப்பொழுதுதான் சியாக்கி குறித்து பல அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.

பைபோலார் டிஸ்ஆர்டர் என்கிற நோயால் அவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவ ஆவணங்களை அவரின் குடும்பத்தினர் காவல் ஆய்வாளரிடம் சமர்ப்பித்தனர். நிலைமையை உணர்ந்த காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

சியாக்கியின் சகோதரர் ஆம்ஸ்ட்ராங்,, தனது தங்கை மூன்று வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பைபோலார் டிசார்டர் இருப்பதால் அவருக்கு கொரோனா பற்றி எதுவும் தெரியாது.

மாஸ்க் ஏன் போட வேண்டும் சானிடைசர் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் தெரியாது. தவறாக தஞ்சை மாவட்ட ஆட்சியரையும், காவல் துறையினரையும் பேசியதற்காக நானும் என் குடும்பத்தினரும் இதற்காக வருத்தம் கேட்டுக்கொள்கிறோம் மனிதாபிமான அடிப்படையில் என் தங்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் '' என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

பைபோலார் டிசார்டர் குறித்து தஞ்சை அரசு மருத்துவர் சிவகுமாரிடம் விளக்கம் கேட்டபோது '' பைபோலார் டிசார்டர் நோய் தாக்கப்பட்டவர்கள் இரண்டு விதமான மன நிலையில் இருப்பார்கள்.

தன்னிடம் அதிகமான சக்தி இருப்பதாக நிகைத்து சொண்டு செயல்படுவார்கள். தன்னை சூப்பர்மேன் போல நினைத்துக் கொள்வார்கள். முறையாக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தால் இந்நோயை குணப்படுத்த முடியும் '' என்கிறார்.

இப்படி ஒரு நோய் இருக்கும் பட்சத்தில் அவரிடத்தில் வாகனம் ஓட்ட அனுமதித்தது ஏன் என்கிற கேள்வியும் இந்த இடத்தில் எழுந்துள்ளது. படபட வென பொரிந்து தள்ளிய நந்தினிக்குள் இத்தனை சோகமா என்றுதான் கருத வேண்டியதுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments