டெல்லியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 48 ஆக்சிஜன் சிலிண்டர்கள் பறிமுதல்

0 7164

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையில், கொரோனா நோயாளிகள் கொத்து கொத்தாக மடிந்து வரும் நிலையில், டெல்லியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 48ஆக்சிஜன் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தஸ்ரத் புரி பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், அனில்குமார் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 48 ஆக்சிஜன் சிலிண்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

அத்தோடு வீட்டின் உரிமையாளர் அனில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பெரிய கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்து அதனை சிறிய அளவிலான சிலிண்டர்களில் அடைத்து ஒவ்வொன்றையும் 12,500 ரூபாய் என கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments