கொரோனாவால் எந்த அளவிற்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியாவின் நிலவரம் நினைவுபடுத்துகிறது - WHO

0 13207
கொரோனாவால் எந்த அளவிற்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியாவின் நிலவரம் நினைவுபடுத்துகிறது - WHO

கொரோனா வைரசால் எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நினைவுபடுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்த அதன் தலைவர் டெட்ரோஸ் அதாநாம் கெப்ரிஷியஸ், வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதுடன், மக்கள் ஒன்றாக திரள்வதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments