தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன

0 1850
தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன

புனேவில் இருந்து மேலும் 4லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்தடைந்தன.

தமிழகத்துக்கு இதுவரை 55லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 8லட்சத்து82ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பு மருந்துகளை வழங்குமாறு  தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மேலும் 4லட்சம் டோஸ் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் புனேவில் இருந்து இன்று சென்னை அனுப்பி வைக்கப்பட்டன.

அவை தேனாம்பேட்டையிலுள்ள மாநில குளிர்பதன சேமிப்பு கிடங்கில் இருந்து 4000-க்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு பிரித்து அனுப்பப்படவுள்ளன. தற்போதைய தடுப்பு மருந்துகளின் கையிருப்பு சுமார் 13 நாட்களுக்கு மேல் போதுமானதாக இருக்கும்மென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments