கொட்டும் மழையில் ஒரு உயிர் போராட்டம்... ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அலட்சியமோ அலட்சியம்!

0 6350
கொட்டும் மழையில் ஒரு உயிர் போராட்டம்... ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அலட்சியமோ அலட்சியம்!

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், விபத்தில் காயமடைந்த இளைஞர்கள், மழையில் நனைந்தபடி ஆம்புலன்ஸ்-க்காக காத்திருந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

இராசிபுரத்தில் வசிக்கும் பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் அமிலேஷ், ராஜேஷ் ஆகியோர் சேலம் சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

மல்லூர் சுபாஷ் நகரைச் சேர்ந்த மணிகண்டன், பூபாலன் ஆகியோர் தங்கள் பைக்கில், இராசிபுரத்தில் இருந்து மல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

இராசிபுரத்தை ஒட்டி, சேலம் பிரதான சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் நான்கு பேரும் பலத்த காயமடைந்து, கால் உடைந்து துடித்தனர்.

அப்போது, பலத்த காற்றுடன் மழையும் பெய்தது. அப்போது, சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ், அரை மணி நேரம் தாமதாமாக வந்து, இரண்டு பேரை மட்டும் அழைத்துச் சென்றது.

சாலையில் மழையில் நனைந்தபடி துடித்துக் கொண்டிருந்த மற்ற இருவரையும், போதிய இடமில்லை என்று கூறி, அழைத்துச் செல்ல மறுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, 20 நிமிடம் கழித்து, மற்றொரு ஆம்புலன்ஸ் வந்து, கால் உடைந்து துடித்துக் கொண்டிருந்தவர்களை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கால் உடைந்து உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த நபரிடமிருந்து, அதிகளவு இரத்தமும் வெளியேறிவிட்டதாக, பொதுமக்கள் தெரிவித்தனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments