கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 3 காவலர்கள் உயிரிழப்பு

0 3094
கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 3 காவலர்கள் உயிரிழப்பு

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 3 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமை காவலர் மகாராஜன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அதேபோல் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்த கருணாநிதியும், கொடுங்கையூர் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் உளவுத்துறை தலைமை காவலராக பணியாற்றி வந்த முருகேசனும் கொரோனாவால் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments