டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் 20 பேர் பலி

0 1438
டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் 20 பேர் பலி

டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில், அபாய கட்டத்தில் இருந்த கொரோனா நோயாளிகள் 20 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அம்மருத்துவமனையின் இயக்குநர் வெளியிட்ட அவசர அறிவிப்பில், மருத்துவமனையில் 210 நோயாளிகள் உள்ள நிலையில், சனிக்கிழமை காலை 10.15 மணி நிலவரப்படி, 45 நிமிடங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார். நேற்று மாலை 5 மணிக்கு தங்கள் மருத்துவமனைக்கு 3,600 லிட்டர் ஆக்சிஜன் வரவேண்டியிருந்ததாகவும், ஆனால் 7 மணி நேரம் தாமதமாக 1500 லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவமனைகளில் 48 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் டெல்லியில் பல மருத்துவமனைகளில் 12 முதல் 18 மணி நேரத்திற்கான இருப்பு மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments