இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என தனது நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

0 1903

ந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என தனது நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று ஆசிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கர்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, பூட்டான் மற்றும் இலங்கைக்கு செல்லும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் மாலத்தீவுகளுக்குச் செல்ல 4ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என மக்களை அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments