கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை

0 7205
கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை

கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தங்கள் ஊதியத்தின் அளவுக்கேற்ப கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள் அதை திரும்ப செலுத்துவதில்லை என்றும், அந்த கடனை மறைத்து பல்வேறு வங்கிகளில் புதிய கடன்களை வாங்குவதாகவும் பள்ளிக் கல்வித் துறைக்கு தொடர் புகார்கள் கிடைக்கப்பெற்றன.

இதன் பேரில் நடவடிக்கை எடுத்துள்ள பள்ளிக் கல்வித் துறை, கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாத ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் இருந்து, அவர்களின் கடன் தொகையை பிடித்தம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments