கொரோனா பரவல் எதிரொலியால் பல்வேறு மாநிலங்களில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்..!

0 1747
கொரோனா பரவல் எதிரொலியால் பல்வேறு மாநிலங்களில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்..!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாட்டின் பல்வேறு நகரங்களில் வார இறுதி ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதுடன், இன்றியமையாப் பணிகளுக்கான போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கத் திங்கள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் ஆகியன ஓடவில்லை. இன்றியமையாப் பணிகளுக்கான வாகனங்கள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் பெங்களூர் நகரின் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

ஒடிசா மாநிலத்தின் நகரப் பகுதிகளில் மட்டும் வார இறுதி ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. திங்கள் காலை 5 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி இல்லை. காலை 5 மணி முதல் 6 மணி வரை நடைப் பயிற்சிக்காக மக்கள் வெளியே செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. புவனேசுவரத்தில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் வார இறுதி ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மருந்தகங்களைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கேரளத்திலும் வார இறுதி ஊரடங்கால் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றியமையாப் பொருட்கள், பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments