கர்நாடகாவில் இன்றும், நாளையும் பொதுமுடக்கம்

0 2153

கர்நாடகத்தில் வார இறுதி நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

சனி. ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு கர்நாடக அரசு ஊரடங்கை அறிவித்தது. இதனையடுத்து நேற்றிரவு கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெங்களூர், ஹூப்ளி போன்ற நகரங்களில் வாகனப் போக்குவரத்து முடங்கியது.

போலீசார் சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அத்தியாவசியப் பணிகள் மற்றும் அவசர கால தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதாக ஹூப்ளி காவல்துறை ஆணையர் லாபு ராம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments