டைம் பாஸூக்கு தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..! வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மகாபிரபு

0 10732
டைம் பாஸூக்கு தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..! வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மகாபிரபு

தென்காசி அருகே தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டிசைன் செய்து தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து நண்பர்களை மாலையுடன் வரவழைத்துள்ளார் அசால்ட் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர். கொரோனாவை விட வேகமாக பரவியுள்ள வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

வாயெல்லாம் பல்லாக சும்மா... என்று நமுட்டு சிரிப்புடன் குறுக்கு சந்தில் நிற்கும் இவர்தான் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அடிமையான ஆட்டோ ஓட்டுனர் மகாபிரபு..!

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்த ஆவுடையாபுரத்தை சேர்ந்த மகாபிரபு, ஆட்டோவில் சவாரி கிடைக்காத நேரத்தில் வாட்ஸ் அப்பில் ஏதாவது வீடியோக்களையோ அல்லது தனது புகைபடங்களை யோ வைப்பதையோ வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் நாம் செத்துப் போனால் எத்தனை பேர் நம் மீது அனுதாப்படுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்துள்ளார்.

அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்த அடுத்த நொடியே ஆட்டோ ஓட்டுனரின் கிளாஸ் மேட்ஸ் நண்பர்கள் அவரது செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு உனக்கு ரோசாப்பு மாலை வாங்கி வரனுமா ? இல்லை மல்லிப்பூ மாலை வேணுமா ? என்று கேட்டு கலாய்த்து விட்டுள்ளனர்

சும்மா டைம்பாஸுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்ததாகவும், அதில் ஒரு என் ஜாய் மெண்ட் இருப்பதாகவும் கூறி கேள்வி எழுப்பியவர்களின் வாயை அடைத்தார் அந்த விபரீத ஸ்டேட்டஸ் மகாபிரபு..!

இந்த கண்ணீர் அஞ்சலி ஸ்டேட்டஸ் விவரம் அறிந்து உள்ளூர் காரர்கள், கேட்ட போதும் மகாபிரபு அதே எகத்தாளத்துடன் தான் பதில் அளித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments