முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் இயங்கும் : மெட்ரோ ரயில் நிர்வாகம்

0 7363
முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் இயங்கும் : மெட்ரோ ரயில் நிர்வாகம்

முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு நாளான நாளை சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் விம்கோ நகர் - விமான நிலையம் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments