மும்முறை உருமாறிய இந்திய கொரோனா வைரசால் காத்திருக்கும் ஆபத்து.. புதிய அறிகுறிகளை எடுத்துக்கூறி உஷார்படுத்தும் இந்திய மருத்துவ உலகம்

0 29440
இந்தியாவில் மும்முறை உருமாறியிருக்கும் கொரோனா வைரசை, ஆர்டீ-பிசிஆர் சோதனையில் கண்டறிய முடியாது என, ஐரோப்பிய யூனியனுக்கான, இந்திய மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மும்முறை உருமாறியிருக்கும் கொரோனா வைரசை, ஆர்டீ-பிசிஆர் சோதனையில் கண்டறிய முடியாது என, ஐரோப்பிய யூனியனுக்கான, இந்திய மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

உருமாறியுள்ள இந்திய கொரோனா வைரசின் தகவமைப்பும் மாற்றம் அடைந்திருப்பதால், ஆர்டீ-பிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறிய முடிவதில்லை என்று கூறியுள்ளார்.

வயிற்றுப்போக்கு, கடும் வயிற்று வலி, தோல் தடிப்புகள், மெட்ராஸ் ஐ என்படும் கண்வலி, குழப்பமான மனநிலை, யோசிக்க முடியாத பதற்றமான சூழல், கை, கால் விரல்களின் நீலநிறமாற்றம், மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் இரத்த கசிவு, தொண்டை புண் உள்ளிட்டவை புதிய அறிகுறிகளாக இருக்கலாம் என கணிக்கப்படுவதாகவும், அதுகுறித்த ஆய்வும் தொடர்ந்து கொண்டிருப்பதாவும், ஐரோப்பிய யூனியனுக்கான இந்திய மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments