இந்தியாவில் ஆக்சிஜன் விநியோகத்திற்கு உதவும் இந்திய விமானப்படை

0 2673
இந்தியாவில் ஆக்சிஜன் வினியோகத்திற்கு உதவி செய்யும் பணியில், இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன.

இந்தியாவில் ஆக்சிஜன் வினியோகத்திற்கு உதவி செய்யும் பணியில், இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17, ஐ.எல். 76 சரக்கு விமானங்கள், ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை, ஆக்சிஜன் உற்பத்தி மைய நகரங்களுக்கு கொண்டு செல்கின்றன. அங்கு ஆக்சிஜன் நிரப்பப்பட்ட பின்னர் டேங்கர் லாரிகள் தேவையான இடங்களுக்கு சாலை மார்க்கமாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து பனாகார்க்கிற்கு டேங்கர் லாரிகளை ஏற்றிக்கொண்டு விமானப்படை விமானங்கள் சென்றன. மருத்துவமனைகளுக்கு  ஆக்சிஜன் விரைந்து சென்றடைய வேண்டும் என்பதற்கான விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments