மது போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு இரவு முழுவதும் ரத்த வெள்ளத்தில் உறங்கிய நபர்

0 4017
திருவள்ளூரில் மது போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு இரவு முழுவதும் ரத்த வெள்ளத்தில் உறங்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டார்.

திருவள்ளூரில் மது போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு இரவு முழுவதும் ரத்த வெள்ளத்தில் உறங்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டார்.

மாரிமுத்து என்ற அந்த நபர், உளுந்தையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். காக்களூர் பகுதியில் தனியாக அவர் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்து அதிகாலை துர்நாற்றம் வீசியுள்ளது.

வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்தபோது, ரத்தக்களறிக்கு நடுவே கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார் மாரிமுத்து. தகவலறிந்து போலீசார் வந்தபோது, ஏதோ தூக்கத்தில் இருந்து எழுவது போல எழுந்த மாரிமுத்துவைப் பார்த்து, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

முந்தையநாள் இரவு முழு போதையில் வந்த அவர், தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டுள்ளார். கத்தி கழுத்தின் ஆழம் பார்க்காத நிலையில், ஏராளமான ரத்தம் மட்டும் வெளியேறி இருக்கிறது.

தனது தம்பி சினிமாவில் பணிபுரிவதாகவும் வித்தியாசமாக எதையாவது செய்து காட்டினால் வாய்ப்பு வழங்குவதாகக் கூறியதால் கழுத்தை அறுத்துக் கொண்டேன் எனவும் மாரிமுத்து கூறினார். ஆனால் விசாரணையில் அவருக்கிருந்த கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments